சூப்பர் எமர்ஜென்சியை கடந்த இந்தியா... மம்தா கடும் தாக்கு

சூப்பர் எமர்ஜென்சி- மம்தா

Sep 15, 2018, 21:31 PM IST

நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து சென்று கொண்டிருப்பதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

Mamata banerjee

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். அத்துடன், வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவுக்கு எதிராக, மத சார்ப்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இன்றைய தினம் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "இன்று சர்வதேச ஜனநாயக தினம். ஆனால், நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வது வேதனை அளிக்கிறது.

2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், ஜனநாயகத்தை காக்க அனைத்து மத சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You'r reading சூப்பர் எமர்ஜென்சியை கடந்த இந்தியா... மம்தா கடும் தாக்கு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை