எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளை தொடர்ந்து, பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும் 'நீட்' தேர்வை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2000 டிப்ளமா நர்சிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த 17 ஆம் தேதி துவங்கியது.
கடைசி நாளான இன்று, ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இன்றைய கலந்தாய்வுக்குப்பின் காலி இடங்கள் இருந்தால், அவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளை தொடர்ந்து, பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும் 'நீட்' தேர்வை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தமிழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கலக்கம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.