உதவி பேராசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்தியா முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியர் பணி மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலைக்கான தகுதி தேர்வினை (University Grants Commission–National Eligibility Test)தேசிய தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY)அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க பதிவு செய்ய கடைசி நாள்: 2018 செப்டம்பர் 30 (இரவு 11:50 மணி)

பல்கலைக்கழக மானிய குழு - தேசிய தகுதி தேர்வு (University Grants Commission–National Eligibility Test)இரண்டு தாள்களை கொண்டது. இரண்டு தேர்வுக்கும் இடையே அரைமணி நேரம் இடைவெளி உண்டு. தேர்வுகள் கொள்குறி வகை வினாக்கள் கொண்டவை. கணினி மூலம் மட்டுமே இத்தேர்வில் பங்கு பெற முடியும். 50 கேள்விகளை கொண்ட முதல் தேர்வுக்கு ஒரு மணி நேரம் மற்றும் 100 கேள்விகளைக் கொண்ட இரண்டாம் தாளுக்கு இரண்டு மணி நேரம் தேர்வு நேரமாக வழங்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு மதிப்பெண்கள். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்பட மாட்டாது.

பாடத்திட்டம்: தேர்வுக்கான பாடத்திட்டத்தை www.ugc.ac.in/net/syllabus.aspx என்ற இணைய இணைப்பில் காணலாம்.

மதிப்பெண் தகுதி: பட்டமேற்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் (தசம திருத்தம் செய்யாமல்)

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (கிரீமிலேயர் தவிர), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத மதிப்ணெக்ள் (தசம திருத்தம் செய்யாமல்)

வயது வரம்பு: இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு: 2018 டிசம்பர் 1ம் தேதி அன்று 30 வயதுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (கிரீமிலேயர் தவிர), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு. ஏனைய வயது வரம்பு சலுகைகளை இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

உதவி பேராசிரியர் பணிக்கு: உச்சபட்ச வயது வரம்பு இல்லை.

தேர்வு கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.800/-
பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ,400/-
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.200/-

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: அக்டோபர் 1, 2018

இணையம் மூலம் விண்ணப்பங்களை திருத்துவதற்கான காலம்: 2018 அக்டோபர் 8 முதல் 14 வரை

தேர்வு நடைபெறும் நாட்கள்: 2018 டிசம்பர் 9 (ஞாயிறு) முதல் டிசம்பர் 23 (ஞாயிறு வரை - சரியான நாட்கள் 2018 அக்டோபர் 21ம் தேதி NTA இணையதளத்தில் வெளியிடப்படும்)
தேர்வுக்கான மேலும் விவரங்களை www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி