நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி திடீர் போராட்டம்

by Isaivaani, Dec 28, 2017, 21:05 PM IST

புதுடெல்லி: டெல்லியில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சி எம்,பிக்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே, மதச்சார்பின்மையைப் பற்றி பேசுபவர்கள் தங்கள் உடலில் ஓடும் ரத்தத்தின் வகை என்ன? என்று தெரியாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்துக்குரிய சர்ச்சை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனந்த் குமார் ஹெக்டேவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கண்டன குரல்கள் எழும்பின. இவ்விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.

இந்த பிரச்னை நாடாளுமன்ற கூட்டத்திலும் தொடர்ந்தது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தனது கருத்து யாருடைய மனதையாவது காயப்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்ள தயாராக இருப்பதாக நாடாளுமன்றத்தில் அனந்த் குமார் ஹெக்டே குறிப்பிட்டார்.

இதற்கிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சி எம்.பி.க்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You'r reading நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி திடீர் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை