பதினெட்டு வயது இந்திய பெண்ணிடம் பல்பு வாங்கிய டிரம்ப் !

18-year-old woman Knock out America President Trump

by SAM ASIR, Nov 29, 2018, 08:29 AM IST

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் பதிவுக்கு அஸ்ஸாம் மாநில இளம்பெண் ஒருவர் கொடுத்த பதில் உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் பயனர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் 11ம் தேதி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அதிக குளிர் நிலவியது. வெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியஸை தொட்ட நிலையில் அதிபர் டிரம்ப், "எப்போதும் இல்லாத அளவுக்கு கொடிய குளிர் நிலவுகிறது. புவி வெப்பமயமாதலுக்கு என்னதான் நடந்து விட்டது?" “Brutal and Extended Cold Blast could shatter ALL RECORDS Whatever happened to Global Warming?” என்று ட்விட் செய்திருந்தார்.

அதற்கு அஸ்தா சர்மா என்ற 18 வயது இளம்பெண், "நான் உங்களை விட 54 வயது இளையவள். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை சராசரி மதிப்பெண்களோடு இப்போதுதான் முடித்திருக்கிறேன். ஆனாலும், வானிலையும் பருவ நிலையும் வெவ்வேறானவை என்று கூற இயலும். அதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவி தேவைப்படுமானால் நான் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது பயன்படுத்திய கலைக் களஞ்சியத்தை தருகிறேன்.

அதில் படங்களோடு விளக்கங்கள் இருக்கின்றன" “I am 54 years younger than you. I just finished high school with average marks. But even I can tell you that WEATHER IS NOT CLIMATE. If you want help understanding that, I can lend you my encyclopedia from when I was in 2nd grade. It has pictures and everything.” என்று பதில் ட்விட் செய்திருந்தார். அஸ்தா சர்மா, அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் மாவட்டத்தை சேர்ந்தவராவார்.

இந்தப் பதிவுக்கு 22,000 பேர் விருப்பம் (like) தெரிவித்துள்ளார்கள். 5100 பேர் ரீட்விட் செய்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள பல ட்விட்டர் பயனர்களும், அதிபருக்கு அளித்த பதிலுக்காக அஸ்தாவுக்கு பாராட்டை தெரிவித்துள்ளனர்.

சிலர் "எதிர்காலத்தின் நம்பிக்கை" என்று அந்த இளம்பெண்ணை புகழ்ந்துள்ளனர். இன்னும் சிலர் அரபி கடல் பகுதியில் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்து உள்ளிருப்பு பயிற்சியை (internship) அஸ்தாவுக்கு வழங்க ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

You'r reading பதினெட்டு வயது இந்திய பெண்ணிடம் பல்பு வாங்கிய டிரம்ப் ! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை