சாம்சங் கேலக்ஸி எம்51: செப்டம்பர் 18 முதல் விற்பனை - விவோ வி19க்கு போட்டியா?

Samsung Galaxy M51: Sales from September 18 - Will it compete with the Vivo V19?

by SAM ASIR, Sep 11, 2020, 16:14 PM IST

கடந்த வாரம் ஜெர்மனியில் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்51 போனின் விற்பனை இந்தியாவில் செப்டம்பர் 18ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆரம்பமாகும். 7000 mAh திறன் கொண்ட பேட்டரி இதன் சிறப்பாகும். எலெக்ட்ரிக் ப்ளூ மற்றும் செலஸ்டியல் பிளாக் ஆகிய நிறங்களில் சாம்சங் கேலக்ஸி எம்51 கிடைக்கும். அமேசான் மற்றும் சாம்சங் தளங்களிலும் விற்பனை நிலையங்களிலும் இதை வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்51 சிறப்பம்சங்கள்

தொடுதிரை : 6.7 அங்குலம் எஃப்எச்டி; 20:9 விகிதாச்சாரம் (கொரில்லா கிளாஸ் 3)
இயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபி
சேமிப்பளவு : 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி மூலம் 512 ஜிபி வரை கூட்டும் வசதி)
முன்புற காமிரா: 32 எம்பி ஆற்றல் (ஃப்ரண்ட் ஸ்லோமோஷன் வீடியோ, 4கே வீடியோ, ஏஆர் டூடில், ஏஆர் எமோஜி அம்சங்கள்)
பின்புற காமிரா: குவாட் காமிரா. 64 எம்பி + 12 எம்பி + 5 எம்பி + 5 எம்பி
பிராசஸர் : குவல்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி ஆக்டோகோர்
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10; ஒன் யூஐ கோர் 2.1
மின்கலம் : 7000 mAh ஆற்றல்

6 ஜிபி இயக்க ஆற்றல் உள்ள போன் ரூ.24,999 விலையிலும் 8 ஜிபி இயக்க ஆற்றல் கொண்டது ரூ.26,999 விலையிலும் கிடைக்கும்.அறிமுக சலுகையாகச் செப்டம்பர் 18 முதல் 20ஆம் தேதி வரைக்கும் அமேசானில் எச்எஃப்டிசி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும்.பக்கவாட்டில் விரல் ரேகை உணரி (ஃபிங்கபிரிண்ட் சென்ஸார்) உள்ளது. காமிராக்களுக்கு சிங்கிள் டேக், ஆட்டோ ஸ்விட்ச், நைட் ஹைபர்லாப்ஸ், மை ஃபில்டர்ஸ் ஆகிய அம்சங்கள் உள்ளன. ரூ.27,999 விலைகொண்ட ஒன்பிளஸ் நோர்ட் போனுக்கும், தற்போது விலை ரூ.24,990 ஆகக் குறைக்கப்பட்டுள்ள விவோ வி19 போனுக்கும் சாம்சங் கேலக்ஸி எம்51 போட்டியாக விளங்கும் என்று கணிக்கப்படுகிறது.

You'r reading சாம்சங் கேலக்ஸி எம்51: செப்டம்பர் 18 முதல் விற்பனை - விவோ வி19க்கு போட்டியா? Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை