ஊராட்சி சபைக் கூட்டத்தை ஊர் ஊராக நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து தூத்துக்குடியில் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினார் கனிமொழி.
பொதுமக்கள் மத்தியில் இதற்கான வரவேற்பு பெருகுவதைக் கண்ட துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதியையும் தேனிக்கு அனுப்பிவைத்தார். இது சர்ச்சையாகவே, நல்லது செய்வதற்கு பதவி எதுவும் தேவையில்லை என விளக்கம் கொடுத்தார் உதயநிதி.
இந்த நிலையில், ஊராட்சி சபைக் கூட்டத்தின் தில்லுமுல்லுகளைப் பார்த்து அதிர்ந்து போய் உள்ளன எதிர்க்கட்சிகள். கூட்டத்தில் யார் யாரெல்லாம் பேச வேண்டும் என்பதை மாவட்ட செயலாளர் முன்கூட்டியே முடிவு செய்து விடுகிறாராம். கூட்டத்தில் இவர்கள் கூட்டி வந்த அந்த 5 பேரைத் தவிர வேறு யாருக்கும் கேள்வி கேட்க அனுமதி கொடுக்கப்படுவதில்லையாம்.
இதையும் மீறி மைக் கேட்பவர்களை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லையாம். கூட்டத்துக்குள் எதிர்க்கட்சி போர்வையில் யாராவது நுழைந்து எடக்கு மடக்காகக் கேள்வி கேட்டு, அது வைரலாகிவிடக் கூடாது எனப் பயப்படுகிறார்களாம் ஸ்டாலின் கிச்சன் கேபினெட்.
-எழில் பிரதீபன்