அரசியலில் ஓபிஎஸ்-க்கு சறுக்கலை ஏற்படுத்த..டிடிவி போட்ட கில்லி பிளான் –தேனி வேட்பாளரின் பின்னணி

ttv dinakaran plan to defeat ops in election

by Suganya P, Mar 22, 2019, 09:30 AM IST

மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை வெளியிட்டார் டிடிவி தினகரன்.

‘தமிழகம் தலைநிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும்’ எனச் சொல்லிவரும் டிடிவி, தேர்தலில் அதிமுக, திமுக-வை வீழ்த்த அதிரடியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறார். செல்வாக்கு நிறைந்த தொகுதிகளைக் கூட்டணிகளுக்கு விட்டுக்கொடுத்ததால் அதிமுக ஆதரவாளர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் திசைதிருப்பக் கில்லாடியாகவும் தேர்தல் களத்தில் இறக்கியிருக்கிறார் டிடிவி தினகரன்.

வாரிசு அரசியலைக் கடுமையாக எதிர்த்து வந்த ஓபிஎஸ், இந்த தேர்தலில் தனது மகன் ரவீந்திரநாத் குமாரை தேனி தொகுதி அதிமுக வேட்பாளராக இறக்கியுள்ளார். வாரிசுக்கு சீட் என்று பேச்சு அடிபடுகிறது. அதனால், தேனியில் செல்வாக்கு பெற்றிருக்கும் ஓபிஎஸ்ஸை அடியோடு சாய்க்க, அவருக்கு இணையான செல்வாக்கில் உள்ள வேட்பாளரை நிறுத்த திட்டம் திட்டியது அமமுக.

அதன்படி, அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுகவிலிருந்து தினகரன் விலகியபோது, அவருக்கு பக்கபலமாக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அதோடு, தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்பவர். தினகரன் போல் தங்க தமிழ்ச்செல்வனும் அரசியல் ரீதியாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர். மேலும், ரவீந்திரநாத்குமாருக்கு எதிராகத் தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டால் போட்டி கடுமையாக இருக்கும் என அமமுகவினர் வலியுறுத்தினர்.

இவற்றை, அலசிய டிடிவி ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு அரசியலில் சறுக்கலை ஏற்படுத்த வலுவான போட்டியாளரைத் தேனியில் களம் இறக்கியுள்ளார் டிடிவி தினகரன்.

You'r reading அரசியலில் ஓபிஎஸ்-க்கு சறுக்கலை ஏற்படுத்த..டிடிவி போட்ட கில்லி பிளான் –தேனி வேட்பாளரின் பின்னணி Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை