கண் மையால் கோடிட்டப்பட்ட அவரது கண்கள். காதில் நீண்ட தோடுகள். கழுத்தைச் சுற்றிலும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட நெக்லஸ். கருப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்ட சேலை. இதுதான் ஜோயிதா மொண்டலின் சமீபத்திய அடையாளம்.
நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் கொல்கத்தாவை சேர்ந்த ஜோயிதா மோண்டல். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதி மக்கள் நீதிமன்றத்தின் (லோக் அதாலத்) நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட ஜோயிதா மோண்டல், சமீபத்தில் தான் சமீபத்தில் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் கொல்கத்தாவை சேர்ந்த ஜோயிதா மோண்டல். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதி மக்கள் நீதிமன்றத்தின் (லோக் அதாலத்) நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்ட ஜோயிதா மோண்டல், சமீபத்தில் தான் சமீபத்தில் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
”ஒரே மாதிரியான பாலின பாகுபாடுகளை நான் உடைத்திருக்கிறேன் என்று நினைக்கிறபோது, பெரிய திருப்தியை அளிக்கிறது. என்னையும், என்னைப் போன்ற எனது பாலினத்தவர்களையும் சீண்டியவர்கள், நீதிக்காக என் முன்னே கைகட்டி நிற்பதை பார்க்கும் போது பெரிய மனநிறைவைத் தருகிறது” என்று பெருமிதத்தோடு கூறுகிறார் ஜோயிதா மோண்டல்.
மோண்டலின் கடந்த காலங்கள் அவ்வளவு எளிதானதாக இல்லை. கொல்கத்தாவில் சாதரண இந்து குடும்பத்தில், உடல் ரீதியாக ஆண் குழந்தையாக பிறந்தவர் மோண்டல். அவர் தான் இனிமேல் ஒரு ஆணாக வாழ முடியாது என்று முடிவெடுத்தபோது, மிகுந்த பாலின பாகுபாடுகளையும், எதிர்ப்புகளையும், நிராகரிப்புகளையும் சந்தித்தார்.
பாலின அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே அவர், வெளியே தலை காட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் பெண்களைப் போல உடையணிவதிலும், பொம்மைகளுடன் விளையாடுவதையும் அதிகம் நேசிப்பவள். ஆனால், ஒரு ஆணாக இருந்து கொண்டு அவ்வாறு என்னால் செய்ய முடியவில்லை.
குறிப்பாக நான் 10 வயதாக இருக்கும் போது. ஆனால், நான் வளர்கின்ற சமயத்தில் பெண்களைப் போலவே ஆடையணிந்து வெளியே செல்வேன். வீட்டிற்கு திரும்பும்கையும் மீண்டும் ஆண்களைப் போல உடையணிந்து கொள்வேன்” என்று தெரிவித்தார்.
ஆனால், தொடர்ந்து அவ்வாறு ரகசியமாக நடிந்து கொள்வதை அவர் விரும்பவில்லை. பிறகு 10ஆம் வகுப்பு முடித்து அவரது நண்பர்கள் அனைவரும் வேறொரு பள்ளிக்கு மாற்றம் அடைந்தனர். அப்போது அவர் பள்ளியை விட்டு நிற்பது என்று முடிவெடுத்தார்.
“எனது பள்ளியின் மற்ற பையன்கள் வாய் வார்த்தைகளால் என்னை காயப்படுத்துகிறார்கள் என்பதை எனது குடும்பத்தினரிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை. எனது தாயாரிடம் மட்டும், எனது உறவினர் வசிக்கும் மாவட்டமான தீனஜ்பூரில் வேலை கிடைத்திருப்பதாகவும், அங்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தேன்.
மேலும், வேலை இல்லையென்றால் இரண்டு மாதங்கள் கழித்து திரும்ப வந்துவிடுகிறேன் என்று தாயாரிடம் கூறினேன். அதற்கு அவர் ஒப்புக் கொண்டார்” என்றார். ஆனால், மோண்டல் திரும்பி வரவேயில்லை.
இங்கு அவர் ஒரு பெண்ணைப் போல சுதந்திரமாக உடையணிந்து திரிந்துள்ளார். அதன் பிறகு மாற்றுப் பாலினத்தவர்கள் போல நடந்துகொள்வதற்கு பயிற்சி மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து திருமண நிகழ்ச்சிகளிலும், குழந்தை பெற்றவர்களின் இல்லத்திற்கு சென்று பாட்டுப் பாடியும் நடனமாடியும் இருந்துள்ளார்.
அதன் பிறகுதான் அவர் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு சேவை செய்ய தொடங்கியுள்ளார். மேலும், அரசு ஆணைகளில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். தவிர, தொடர்ந்து அவர் தொலைதூர கல்வி நிலையங்களின் வழியாக தனது மேற்படிப்பையும் தொடர்ந்துள்ளார். தனது சட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு மாற்றுப் பாலினத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டைகளில் ஆண், பெண் இருவர்கள் தவிர்த்து ‘பிற’ என்ற பிரிவைச் சேர்த்தது. அதன்படி, தீனஜ்பூரில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றுப் பாலினத்தவர் பிரிவின் கீழ் முதன் முறையாக அடையாள அட்டை பெற்ற முதல் மாற்றுப் பாலினத்தவர் என்ற பெருமையை பெற்றார் மோண்டல்.
ஒருமுறை அவர் ரயிலை தவறவிட்டுள்ளார். அதன்பின் தங்குவதற்கு அனைத்து ஹோட்டல்களிலும் ஏறி, இறங்கி உள்ளார். ஆனால், அவரது பாலினம் காரணம் அனைத்து ஹோட்டல்களிலும் இருந்து வெளியே தள்ளப்பட்டுள்ளார். இந்த கொடுமையான இரவு அனுபவத்திற்கு பிறகுதான், மாற்றுப் பாலினத்தவர் குறித்த மக்களின் மனநிலையை மாற்ற வேண்டியது குறித்து உணர்ந்துள்ளார்.
எப்படியோ இன்றைக்கு அவர், மாற்றுப் பாலினத்தவர்களூக்கென்று பல முன்னெடுப்புகளின் காரணமாக நீதிபதியாக பதவி வகிக்கிறார். இதன் மூலம் மற்ற குடிமக்கள் போன்றே மாற்றுப் பாலினத்தவர்களும் நிறைய வாய்ப்புகள் பெற காரணமாகி உள்ளார். இதனால், மற்றவர்களும் அவர்களுக்கு உரிய மரியாதையும், கவுரவத்தையும் வழங்குகின்றனர்.
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி இந்தியா முழுவதும் ஏறக்குறைய 50 லட்சம் அளவில் மாற்று பாலினத்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.