எத்தனை படிப்புகள் இந்த உலகில் இருந்தாலும், திறமையும் புதுமையும் கொண்ட ஒரே படிப்பு பொறியாளர் துறைதான். காலம் இத்துறையை ஏற்றியும் இறக்கியும் காட்டியுள்ளது ஆனால் இத்துறையால் இந்தியா என்றும் தாழ்ந்தது இல்லை. படிப்படியாக நாட்டின் முன்னேற்றத்திற்கு துணையாக உள்ளது.
பொறியாளர் என்று சொல்லும்போது எப்பவும் ஒரு கெத்து இருக்கதான் செய்கிறது. நம் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொறியாளர் படிப்புக்கான சேர்க்கை குறைந்து கொண்டுதான் வருகிறது. வேலைக்காக சேர்ந்தவர்களை விட பெருமையாக வெளியில் சொல்லிக்க படித்தவர்கள்தான் அதிகம்.
பொறியாளர் படிப்பு படித்த, பொறியாளர்கள் எல்லாம் மிகுந்த திறமைசாலிகள். பொறியாளர் படிப்பைத் தவிர மற்ற எல்லாத்துறையிலும் சிறந்து விளங்கும் ஆற்றல் இவர்களுக்கு மட்டுமே உண்டு.
அப்படி பொறியாளர்கள் அனைவருக்கும் முதன்மைப் பொறியாளராக இருந்த ஒருவரின் பிறந்தநாளே இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரையா தான் அந்தப் பெருமைக்குரிய பொறியாளர்.
"சர் எம்.வி" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். புனே பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கல்லூரியில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்பாசனத்துறை கமிஷனில் பொறியாளராக அரசால் நியமிக்கப்பட்டு பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையிலும் பொறியாளர்களின் பங்கு இன்றியமையாதது. அப்படிப்பட்ட பொறியாளர்கள் அனைவருக்கும் இனிய பொறியாளர் தின வாழ்த்துகள்!