சிறந்த நட்பிற்கு தேவையானவை எது....?!

அனைவரின் நட்புமுமம் சிறந்ததுதான் ஆனால் சில காரணங்களால் உயிரினும் மேலான நட்பை இழக்க நேரிடுகிறது

Sep 15, 2018, 18:35 PM IST

அனைவரின் நட்புமுமம் சிறந்ததுதான் ஆனால் சில காரணங்களால் உயிரினும் மேலான நட்பை இழக்க நேரிடுகிறது.அவற்றை தடுக்கவே நாங்கள் இங்கே எளிய வழியைக் கூறியுள்ளோம்.

     இவை வாழ்க்கைக்கும் உதவும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

  1. உங்கள் நண்பரை மற்றநண்பர்களிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறிமுகப்படுத்துங்கள்.
  2. நண்பர்களிடம் கலந்து பேசும்போது பொதுவான விசயங்களைப் பேசினால் பெரும்பாலும் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
  3. மனம் திறந்து நண்பர்களோடு உரையாடுங்கள்.
  4. உங்கள் நண்பருக்கு நல்ல நண்பராக இருக்கும்படி உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
  5. தேவைப்படும்போது உங்கள் நண்பருக்கு தகுந்த ஆலோசனை சொல்லுங்கள்.
  6. கூட்டத்தில் ஒரே நண்பருடன் பேசிப் கொண்டிருப்பதற்குப் பதில் மற்றவர்களையும் நண்பராக்க முயற்சி செய்யுங்கள்.
  7. இயற்கையாகவே நட்பு உருவாகட்டும். வலிந்துபோய் நட்பைத் திணிக்காதீர்கள்.
  8. புதிய இடத்தில் வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்காதீர்கள். உண்மையா நட்புணர்வோடு பழகுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் தோற்றத்தைப் பார்த்துக்கூட நட்பு உருவாகலாம்.
  9. உங்களைப் பற்றி நீங்களே அதிகமாகப் புகழ்ந்து பேசாதீர்கள். “தற்பெருமை பேசுபவர்” என்று உங்களை மற்றவர்கள் ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
  10. நண்பர்கள் வட்டத்தில் நீங்கள் தான் எப்போதும் தலைவர் என்பது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
  11. நண்பர்களுக்குத் தேவையில்லாமல் கட்டளையிடாதீர்கள். நண்பர்களிடம் வீண் அதிகாரம் செய்யாதீர்கள்.
  12. பரிசுகள் கொடுத்தும், பணத்தைக் கொடுத்தும் நட்பை வளர்க்காதீர்கள். நட்புக்கு விலை பேசுவது முடிவில் பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.
  13. நண்பர்களிடம் பேசும் போது ‘வளவள’ என்று நீண்ட நேரம் பேசாதீர்கள்.’அறுவைகேஸ்’ என்று உங்களை ஒதுக்கிவிடுவார்கள்.
  14. நட்புக்கு பொறுமை அவசியம் தேவை. விட்டுக்கொடுத்து வாழும் பழக்கம் நல்ல நட்பை உருவாக்கும்.
  15. “வேண்டாம்” என்று எவரையும் ஒதுக்காதீர்கள். எதிரிகள் உருவாகிவிடுவார்கள்.
  16. உங்கள் குடும்பத்திற்கு நன்கு தெரிந்தவர்களை முதலில் நண்பர்களாக்குவது நல்லது.
  17. தன்னம்பிக்கையோடு காட்சி தாருங்கள். தன்னம்பிக்கை கொண்டவர்களை மக்கள் விரும்புவார்கள்.
  18. நண்பர்களிடம் சிரித்துப் பேசி மகிழ்ந்துவிட்டு, பின்னர் அந்த நண்பரின் முதுகுக்குப் பின்னால் குறைசொல்லாதீர்கள். இந்த செயல் பெரும் சிக்கலை உருவாக்கிவிடும்.
  19. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தால் நட்பு உருவாகும் என்று நினைக்க வேண்டாம். நேர்மறையாக (Positive) சிந்தித்து, நம்பிக்கையுடன் செயல்பட்டாலே நல்ல நண்பர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள்.
  20. உங்கள் நண்பரின் செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அவரைப்பற்றி மற்றவர்களிடம் குறைசொல்லாதீர்கள்.
  21. புதிய நண்பர்களை உருவாக்குங்கள். ஆனால் அதேவேளையில் பழைய நண்பர்களை மறந்துவிடாதீர்கள்.

சொன்னக் கருத்தை மனதில் நிறுத்தி நல்ல நண்பர்களோடு பழகும் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.

You'r reading சிறந்த நட்பிற்கு தேவையானவை எது....?! Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை