`அவர் ஒரு லெஜெண்ட் அவருடன் எப்படி கம்பேர் பண்ண முடியும் - ரிஷாப் பான்ட் ஓப்பன் டாக்

Rishabh Pant talks about on comparison with MS Dhoni

Mar 17, 2019, 11:37 AM IST

மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் என்ற இமாலய ரன் குவித்தது. ரோகித் சர்மாவும் (95) ஷிகர் தவானும் (143) ஓபனிங்கில் விளாச இந்த ஸ்கோரை இந்தியா எட்டியது. 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்ததால் இந்தியா உறுதியாக வெற்றி பெறும், தொடரையும் கைப்பற்றப் போகிறது என்ற உற்சாகத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திலும், டிவி நேரலை ஒளிபரப்பிலும் போட்டியை பார்த்துக்கு கொண்டிருத்தனர்.

ஆஸ்திரேலியாவும் தட்டுத்தடுமாறி ஆடினாலும் ஒரு கட்டத்தில் தேவையான ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போதுதான் இந்தியாவின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுவது போல் ஆஸி.அணியின் டர்னர் அதிரடியாக சிக்சர், பவுண்டரிகளாக விளாசத் தொடங்கினார். டர்னர் 38 ரன்கள் எடுத்திருந்த போது 44வது ஓவரை ச கால் வீசினார். அப்போது அருமையான ஸ்டம்ப்பிங் வாய்ப்பை ரிஷாப் பான்ட் தவற விட்டு விட்டார். இதன் பின்னர் மளமளவென ரன் குவித்த டர்னர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசி 2 ஓவர்கள் பாக்கி இருக்கும் போதே ஆஸி அணியை வெற்றி பெறச் செய்து விட்டார்.

இந்தியாவின் தோல்விக்கு ரிஷாப் தவறவிட்ட ஸ்டம்பிங்கே காரணம். இந்நேரம் தோனி இருந்திருந்தால் கதையே வேற.. என்ற லெவலில் ரிஷாப்பை வறுத்தெடுத்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். தொடர்ந்து அவர் குறித்த ட்ரோல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தற்போது ரிஷாப் பேசியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``நான் அதை பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஏனென்றால் ஒரு வீரனாக, அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர் ஒரு லெஜெண்ட். நான் மக்கள் ஒப்பிட்டை விரும்பவில்லை. நான் தோனியுடன் நெருக்கமாக இருக்கிறேன். எல்லாவற்றையும் பற்றி நான் அவரிடம் பேசுகிறேன். என்னுடைய விளையாட்டை எப்படி மேம்படுத்துவது மற்றும் நான் எப்படி முன்னேற்ற வேண்டும் என்பதிலேயே சிந்தனை இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

You'r reading `அவர் ஒரு லெஜெண்ட் அவருடன் எப்படி கம்பேர் பண்ண முடியும் - ரிஷாப் பான்ட் ஓப்பன் டாக் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை