உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

world cup cricket south africa team announced

by Suganya P, Apr 18, 2019, 00:00 AM IST

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இங்கிலாந்தில் வரும் மே 30ல் தொடங்குகிறது. இப்போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் என மொத்தம் 10 அணிகள் இந்த உலகக்கோப்பையில் பங்குபெறுகின்றன.

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை,  நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணைகள் வெளியிட்டுள்ளன. அதேபோல், கடந்த 15ம் தேதி இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்குபெறும் தென்னாப்பிரிக்கா அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், பாஃப் டு பிளசிஸ் (கேப்டன்), ஹாசிம் அம்லா, குயிண்டான் டி காக் (கீப்பர்), ஜெ.பி. டுமினி, ஐடென் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ச், அன்டைல் பெஹ்லுக்வாயோ, டிவைன் பிரிடோரியஸ், கஜிசோ ரபாடா, டப்ராய்ஸ் ஷம்சி, டேல் ஸ்டின், இம்ரான் தஹிர், ரஸ்ஸி வேன் டெர் டஸ்ஸென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணியில், டு பிளசிஸ், அம்லா மற்றும் ஜெ.பி.டுமினி ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதால் தென்னாப்பிரிக்கா அணி ஃபார்மில் உள்ளது. இந்நிலையில் அணிக்கு மேலும் வலுவூட்டும் வகையில், ரபாடா, நிகிடி மற்றும் ஸ்டின் ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்கள் இருப்பதால், தென்னாப்பிரிக்கா அணியிடம் மோதுவது சற்று கடினம்தான்.

You'r reading உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை