`வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்' - சென்னை வெற்றி குறித்து புலவர் ஹர்பஜன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் போட்டு ட்விட்டரில் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இதில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி 8வது முறையாக பைனலுக்கு சென்றது. நாளை மறுநாள் மும்பை அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே சென்னை அணியின் வெற்றி குறித்து சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டுள்ளார்.

அதில், ``இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை! Let's do it" எனப் பகிர்ந்துள்ளார். நேற்றைய வெற்றிக்கு ஹர்பஜன் முக்கிய காரணமாக அமைந்தார். நான்கு ஓவர்கள் வீசிய ஹர்பஜன் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த இரண்டு விக்கெட்டுகளில் ஒருவர் ஷிகர் தவான், மற்றொருவர் ரூதர்போர்டு. இருவருமே அபாயகரமான வீரர்கள். ஆனால் அவர்களை சரியான நேரத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்தார் ஹர்பஜன். இதன்மூலம் டெல்லி அணியை குறைந்த ரன்களில் சுருட்ட முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சூப்பர் கிங்ஸ் ..? மும்பையுடனான புள்ளி விபரம் இடிக்குதே..?

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்