இந்திய அணி... ஒரு பார்வை

India

Sep 14, 2017, 20:45 PM IST

செப்டம்பர் 17ம் தேதி முதல் ஆஸ்திரேயிய அணிக்கு எதிராக இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20-20 போட்டியும் ஆட இருக்கிறது...

 முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 17-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது,

 அதை தொடர்ந்து, கொல்கத்தா (செப்.21), இந்தூர் (செப்.24), பெங்களூரு (செப்.28), நாக்பூர் (அக்டோபர் 1) ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது

மேலும் இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டிகள் முறையே ராஞ்சி (அக்.7), கவுகாத்தி (அக்.10), ஐதராபாத் (அக்.13) ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளில் ஆடும் இந்திய அணி வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அஜிங்க்ய ரஹானே, மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், மொகமது ஷமி.

இந்த அணியில் முதலில் அறிவிக்கப்பட்ட தொடக்க வீரர் ஷிகர் தவான், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அணியிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது,

இதற்கு முன்பு, இலங்கை சுற்றுப்பயணத்திலும் கடைசி போட்டியின்போது தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லையென்று அவர் தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது,

ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், அஜிங்க்ய ரஹானே இவர்கள் மூவரில் தொடக்க வீரராக யாரை களம் இறக்குவது என்பது குறித்து அணி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளதால் தவானுக்கு பதிலாக மாற்று ஆட்டக்காரர் யாரையும் அணியில் சேர்க்கவில்லை,

மேலும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்கள் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிள்ளது,

அணியின் தேர்வு குறித்து நிருபர்களிடம் பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், “இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக இளம் வீரர்களான அக்சர் படேல், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பான முறையில் பந்துவீசினர். அதனால் அவர் களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவெடுத்தோம். மேலும் தற்போது கடைபிடித்து வரும் சுழற்சி முறையின் அடிப் படையில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுத்துள்ளோம்” என்றார்.

முதலாவது போட்டிக்காக சென்னை வந்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய அணி சமீபகாலமாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறது. சுழற்பந்து வீச்சில் அது வலுவாக உள்ளது. சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அவர்களுக்கு எதிரான வியூகங்களை வகுத்து வருகிறோம். அதே நேரத்தில் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எங்கள் பந்துவீச்சாளர்கள் அவரைக் கட்டுப்படுத்தி வைப்பதைப் பொறுத்துதான் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி இருக்கிறது.

முதலாவது போட்டி நடக்கும் சென்னையில் டிக்கெட் கட்டணத்தின் ஆரம்ப விலை 500 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டயள்ளது,

 

You'r reading இந்திய அணி... ஒரு பார்வை Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை