மே, இந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மழை மிரட்டல் காரணமாக போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. இன்றைய போட்டியில் வென்றாலோ அல்லது போட்டி ரத்தானாலோ, மே.இ.தீவுகள் மண்ணில் தொடர்ந்து 4 - வது முறையாக ஒரு தொடரை கைப்பற்றிய சாதனையை இந்தியா படைக்க உள்ளது.
மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஆடியது. 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
அடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்தானது.போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த 2-வது போட்டியிலும் மழை குறுக்கீடு செய்தது. ஆனாலும் டக்வொர்த் லீவிஸ் முறையில் 56 ரன்கள் வித்தியாகத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம்
1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்றிரவு 7 மணிக்கு போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் தொடர்ந்து துரத்தி வரும் மழை, இன்றைய ஆட்டத்திலும் பெரும் குறுக்கீடு செய்யும் என வானிலை நிலவரம் கூறுகிறது. இன்று போட்டி தொடங்கி முடியும் நேரம் வரை, இடியுடன் கூடிய மழை பெய்ய 88 சதவீதம் வரை வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால் மழையால் போட்டி ரத்தாகும் வாய்ப்பே அதிகம் என தெரிகிறது.
இதனால், ஒரு வேளை இன்றைய போட்டி நடைபெற்றால், தொடரை கைப்பற்ற இந்தியா வெற்றி பெற வேண்டும். மாறாக மழையால் ரத்தானால் இந்தியாவே தொடரை கைப்பற்றும் என்ற நிலை உள்ளது.
ஒரு நாள் போட்டிகளில், கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு எதிராக மே.இ.தீவுகளின் நிலைமை மிகவும் பரிதாபமானதாகவே உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் ஒரு போட்டியில் கூட இந்தியாவை மே.இ.தீவுகள் வென்றதில்லை.
அதே போல் மே.இ.தீவுகள் மண்ணில் கடைசியாக கடந்த 2009, 2011, 2017 ஆகிய ஆண்டுகளில் நடந்த 3 ஒருநாள் தொடரையும் இந்தியாவே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தான் மே.இ.தீவுகளின் சோகம் தற்போதைய தொடரிலும் தொடர்கிறது . இன்று 4-வது முறையாக தொடரை கைப்பற்றும் வாய்ப்புகள் இந்தியாவுக்கே அதிகமாக உள்ளது.
சாதனை மேல் சாதனை படைக்கும் கோஹ்லி : மே.இ.தீவுகளை வென்றது இந்தியா