2ம் சோதனையிலும் கொரோனா இல்லை.. மகிழ்ச்சியுடன் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே!

by Sasitharan, Sep 4, 2020, 08:25 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்படவுள்ளது. இதனை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி செய்துள்ளார். இதனால் தொடர் நடப்பது உறுதியாகியுள்ளது. எனினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்தது. காரணம், 28-ம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்டில் சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்பட 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதனால் அவர்கள் அனைவரும் துபாயில் சிஎஸ்கே வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அங்குக் கடந்த ஒரு வாரமாக அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 31ம் தேதி அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 13 பேருக்கும் கொரோனா நெகட்டிவ் என வந்தது. எனினும் 3ம் தேதி எடுக்கப்படும் கொரோனா சோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை அணி நிர்வாகம் தரப்பில் உறுதியாக கூறப்பட்டது. இப்போது 3ம் தேதி எடுக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் வந்துள்ளன. இதிலும் நெகட்டிவ் என வந்துள்ளதால், சென்னை அணி வீரர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர். இது சென்னை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

READ MORE ABOUT :

More Ipl league News

அதிகம் படித்தவை