`இது வெறும் ஆரம்பம்தான்!- கர்ஜிக்கும் வங்கதேசம்

by Rahini A, Mar 19, 2018, 19:33 PM IST

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற நிதாஸ் கோப்பை நேற்று முடிவடைந்தது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் வங்கதேசம் தோல்வியடைந்தது. இந்நிலையில் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், `இந்த தோல்வியால் துவண்டு விடமாட்டோம். எங்கள் புதிய அத்தியாயத்தின் வெறும் ஆரம்பம்தான் இது’ என்று நம்பிக்கைத் ததும்ப பேசியுள்ளார். நேற்று நடந்த இறுதிப் போட்டி, கடைசி பந்து வரை சென்றது.

இந்தியா ஆபார வெற்றி பெற, கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் வங்கதேசம் 30 ரன்களுக்கும் மேல் கொடுத்து மண்ணைக் கவ்வியது. இந்தப் போட்டிக்கு பிறகு வங்கதேச அணி கேப்டன் ஷகிப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், `இது எங்கள் அணிக்கு மிகச் சிறந்த தொடராக இருந்தது. நாங்கள் தோல்வியடைந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கலாம்.

ஆனால், அதைப் போன்ற தோல்விகளை கண்டு கொள்ளக் கூடாது. இந்தத் தொடரில் எங்களுக்கு நிறைய நேர்மறை விஷயங்கள் இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் அணியின் சில பௌலர்களும் திறம்பட விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், சில சின்ன சின்ன விஷயங்களால் பின் தங்கி விடுகிறோம். அதையெல்லாம் சீக்கிரமே சரிகட்டி விடுவோம். இது வங்கதேச கிரிக்கெட்டின் புதிய அத்தியாயமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading `இது வெறும் ஆரம்பம்தான்!- கர்ஜிக்கும் வங்கதேசம் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை