ஆஸ்திரேலியாவுக்கு எதிரான படுதோல்வி… கொந்தளிக்கும் மித்தாலி ராஜ்!

by Rahini A, Mar 19, 2018, 21:08 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்தது.

இதில் இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளதை அடுத்து, அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் கொந்தளித்துள்ளார். தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியை, அவர்கள் மண்ணிலேயே சில வாரங்களுக்கு முன்னர் வீழ்த்தியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் தொடரை வென்றதை அடுத்து, வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது இந்திய அணி.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வடோதராவில் நடந்தது. இந்த மூன்று போட்டியிலும் ஆஸ்திரேலியா ஆதிக்கம் காட்டி, இந்திய அணியை தவிடுபொடியாக்கியது. இந்நிலையில் இந்தத் தொடர் குறித்துப் பேசிய மித்தாலி, `நாங்கள் தென்னாப்பிரிக்காவை அவர்கள் நாட்டிலேயே வீழ்த்தியது உண்மைதான். ஆனால், ஆஸ்திரேலியா இருப்பதிலேயே வலிமைமிக்க அணிகளில் ஒன்று. அவர்களை எதிர்கொள்ளும் போது முழு திறனை வெளிக்காட்டினால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும்.

எங்கள் அணியின் பலம் பேட்டிங். அதில் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். அதில் கோட்டை விட்டால் மற்ற அனைத்தும் சரிந்துவிடும். அதுதான் இந்தத் தொடரில் நடந்தது. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. அது இந்தத் தொடரில் நன்றாக தெரிந்தது. அணியை வலுவாக்க நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்தத் தொடர் எங்கள் கண்களை திறந்துவைத்துள்ளது’ என்று கடுகடுத்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஆஸ்திரேலியாவுக்கு எதிரான படுதோல்வி… கொந்தளிக்கும் மித்தாலி ராஜ்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை