தொடர் தோல்வி, மீண்டும் சொதப்பிய தோனி!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (02-10-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவை போல்டாக்கி பேரதிர்ச்சியைக் கொடுத்தார், சென்னை அணியின் பந்து வீச்சாளர் தீபக் சஹர். பின்னர் களமிறங்கிய முன்னணி வீரர்களும் வரிசையாக பெவிலியின் திரும்ப ஹைதராபாத் அணி 130 ரன்களை கூட அடிப்பது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வில்லியம்சனை ரன் அவுட் ஆக்கிய பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா உடன் கைகோர்த்து நிதானமாகத் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கார்க் 26 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என அதிரடி காட்டி 51 ரன்களை குவித்தார். அபிஷேக் ஷர்மாவும் 4 பவுண்டரி, 1 சிக்சர் என 31 ரன்களை குவித்து அணிக்கு வலுசேர்த்தனர். முன்னணி வீரர்கள் எவரும் சோபிக்காத பட்சத்தில், இளம் வீரர்களின் இந்த பொறுப்பான ஆட்டம் பாராட்டுக்குரியது. ஹைதராபாத் அணி இருபது ஓவர் முடிவில் 164/5 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பில் நேற்று புதியதாகக் களமிறக்கப்பட்ட சர்துல் தாக்கர் மற்றும் பிராவோ இருவரும் சிறப்பாகப் பந்து வீசினர். தீபக் சஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு உதவினார்.

ஒரு வார ஓய்விற்குப் பின் களமிறங்கிய சென்னை அணி, பந்து வீச்சில் சிறப்பாகச் செயல்பட்டதை போல பேட்டிங்கிலும் செயல்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சொதப்பியது. சென்னை அணியின் தொடக்க இணை மாற்றப்பட்டுக் களமிறங்கிய வாட்சன் மற்றும் பிளசிஸ் ஜோடியும் சோபிக்க தவறியது.

ஹைதராபாத் அணி பல தவறுகளைச் செய்தும், அதனைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது சென்னை அணி. ஓய்வுக்குப் பின் களம் கண்ட அம்பத்தி ராயுடு போல்ட் ஆகி வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் மற்றும் தோனி இணை அணியை மீட்டெடுக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றினார் ஜாதவ்.கேதார் ஜாதவ் கடைசியாக விளையாடிய 18 இன்னிங்சில் 1 முறை மட்டுமே 30 ரன்களை கடந்துள்ளார். மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படும் ஜாதவ், அவரின் பலமான் புல் ஷாட்டுகளை அடிக்க தவறிவிடுகிறார். மேலும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவரால் இயல்பாக ஆட முடியவில்லை.

அணியின் விக்கெட்டுகள் சரிய மொத்த அழுத்தமும் தோனியின் மீது விழுந்தது. தோனியுடன் கைகோர்த்த ஜடேஜா ஒருபுறம் அதிரடியாக விளையாடி 35 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர் என 50 ரன்களை குவித்தார்.சிறப்பாகப் பந்து வீசினாலும், ஹைதராபாத் அணி நேற்றைய போட்டியில் பல்வேறு தவறுகளைச் செய்தது. இதனால் ஹைதராபாத் அணியின் வெற்றி கேள்விக்குறியானது.

கடைசி இரண்டு ஓவரில் 44 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19 ஓவரை வீச வந்த புவனேஸ்வர் குமார் தசைப்பிடிப்பால் வெளியேற, தோனி மற்றும் சாம் கரண் களத்தில் இருந்ததால் சென்னையின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. 19 வது ஓவரில் மீதமுள்ள 5 பந்துகளை கலீல் அகமது வீசினார்.

கடைசி ஓவரில் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி சார்பாக அப்துல் சமாத் பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் பந்தை வைடாக வீச பந்து பவுண்டரியை அடைந்தது . இதனால் 6 பந்திற்கு 23 ரன்கள் தேவைப்பட்டது.ஆனால் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தோனி இடையே துவண்டுபோனது சென்னை ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. கடைசியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் இரு அணிகளும் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அவ்வளவு வாய்ப்பு இருந்தும் சென்னை அணி அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. பல தவறுகள் செய்தாலும் இறுதியில் வெற்றியைத் தன்வசப்படுத்திக் கொண்டார் "டிக் டாக் மன்னன் " ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர்.

இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்.

Advertisement
மேலும் செய்திகள்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
pat-cummins-donates-50000-to-pm-cares-fund
என்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்
the-lowest-score-by-rcp-in-ipl-t20-cricket-history
ஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி!
jofra-archer-out-of-ipl
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்?
raina-touch-harbhajan-singh-feet
ஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
pragyan-ojha-reveals-the-reason-why-ms-dhoni-never-wishes-his-teammates-good-luck
தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
csk-should-build-their-team-around-him-michael-vaughan-picks-ravindra-jadeja
தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம்! – மைக்கேல் வாகன் கருத்து
rashid-khan-s-instagram-reel-of-kane-williamson-and-david-warner-has-gone-viral
`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்!

READ MORE ABOUT :