ராஜஸ்தான் கேப்டனுக்கு இவ்வளவு அபராதமா?

by Loganathan, Oct 7, 2020, 10:59 AM IST

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (06-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஷேய்க் ஜயாட் ஆடுகளத்தில் நேற்று விளையாடின.இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும், சூர்ய குமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயரத்தினார். மேலும் இந்த சீசனின் முதல் அரை சதத்தை, 47 பந்தில் 11 பவுண்டரி 2 சிக்சர் விளாசி 79 ரன்களை பதிவு செய்தார். இவர் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருபது ஓவர் முடிவில் மும்பை அணி 193/4 ரன்களை விளாசியது.

ராஜஸ்தான் அணியின் சார்பாக பட்லரை தவிர வேறு யாரும் சிறப்பாகச் செயல்படவில்லை பேட்டிங்கில் . பட்லர் 44 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர் விளாசி 70 ரன்களை சேர்த்து அவுட்டானார். இவரும் இந்த சீசனின் முதல் அரை சதத்தை நேற்றைய போட்டியில் பதிவு செய்தார். இறுதியில் ராஜஸ்தான் அணியால் 136 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் சிறப்பாகப் பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்த போது மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக, ஐபிஎல் சட்ட விதிகளின் படி ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்க்கு ரூ.12 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவும் இந்த சீசனின் முதல் அபராதமாகும்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Ipl league News