IPL கிரிக்கெட் தொடரின் 4 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி

IPL கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

14 வது IPL கிரிக்கெட் தொடரின் 4 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பஞ்சாப் அணியின் சார்பில் கேப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சகாரியா பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மயங்க் அகர்வால் 14 ரன்னில் அவுட் ஆனார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல்.ராகுல் 30 வது பந்தில் அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா 20 வது பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் கடைசி ஓவரில் 91 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.

222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மணன் வோக்ரா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பென் ஸ்டோக்ஸ் டக்அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மணன் வோக்ரா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடி காட்டியது. ஜோஸ் பட்லர் 25 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே 23 ரன்களில் வெளியேறினர்.

அதிரடி காட்டிவந்த சஞ்சு சாம்சன் தனது அரை சதத்தை பதிவு செய்தார். இதனிடையே அதிரடியாக ரன் குவித்து வந்த ரியான் பராக் 25 ரன்களில் வெளியேறினார். தனது அதிரடியை தொடர்ந்த சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கடைசி ஒவரில் சஞ்சு சாம்சன் 119 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 217 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றிபெற்றது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
pat-cummins-donates-50000-to-pm-cares-fund
என்னால் முடிந்தது; ஆக்ஸிஜன் வாங்கிக்கொள்ளுங்கள் - பேட் கம்மின்ஸ் மனிதநேயம்
the-lowest-score-by-rcp-in-ipl-t20-cricket-history
ஆர்சிபி வரலாற்றில் மறக்க முடியாத நாள் - 49க்கு ஆல் அவுட் வெற்றியாளராக மாற்றிய வெறி!
jofra-archer-out-of-ipl
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகினார் ஆர்ச்சர் - என்ன காரணம்?
raina-touch-harbhajan-singh-feet
ஹர்பஜன்சிங் காலில் விழுந்து வணங்கிய சின்னதல - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
pragyan-ojha-reveals-the-reason-why-ms-dhoni-never-wishes-his-teammates-good-luck
தோனி அதை மட்டும் செய்யமாட்டார் - அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!
csk-should-build-their-team-around-him-michael-vaughan-picks-ravindra-jadeja
தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம்! – மைக்கேல் வாகன் கருத்து
rashid-khan-s-instagram-reel-of-kane-williamson-and-david-warner-has-gone-viral
`அன்பு சூழ் உலகு – ரஷித்கானுக்காக நோன்பிருக்கும் டேவிட் வார்னர்!
Tag Clouds

READ MORE ABOUT :