வயது 102… வேகம் 102 ஜிகா பைட்!

102 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றார்

by Mari S, Sep 15, 2018, 08:55 AM IST

இந்தியாவைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Man Kaur

ஸ்பெயின் நாட்டின் மலாகா நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் 100 முதல் 104 வயதுக்கு உட்பட்டோருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் இந்தியா சார்பில் மேன் கவுன் என்ற மூதாட்டி கலந்துகொண்டார்.

102 வயதில் தங்கப் பதக்கம்:

சட்டிஸ்கரைச் சேர்ந்த மேன் கவுன் (102 வயது) பந்தய தூரத்தை வெறும் 3 நிமிடம் 14.65 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைத் தனதாக்கினார்.

Man Kaur

ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தொடரில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றிருக்கிறார்.

2016ஆம் ஆண்டு அமெரிக்கன் மாஸ்டர்ஸ் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 1 நிமிடம் 21 விநாடிகளில் கடந்தார். இதன் மூலம் 100 வயதுக்கு மேல் 100 மீட்டர் ஓட்டத்தை வேகமாகப் பூர்த்திசெய்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

பாட்டிக்கூட ரேஸ் ஓடினா நம்மளால பாதி தூரம் கூட கடக்கமுடியாது!

You'r reading வயது 102… வேகம் 102 ஜிகா பைட்! Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை