உலககோப்பை ஹாக்கி: இந்தியா – பெல்ஜியம் ஆட்டம் டிரா!

world cup hockey india belgium match tied

Dec 3, 2018, 07:37 AM IST

ஒடிசாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வரில் நடைபெற்று வரும் 14வது உலககோப்பை ஹாக்கி தொடரில், நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கான 2வது போட்டியில், இந்திய அணி பெல்ஜிய அணியுடன் பலப்பரிட்சை நடத்தியது.

இரு அணிகளும் அபாரமாக தொடக்கம் முதலே ஆடின. இதில், முதலில் கோல் அடித்த பெல்ஜியம் அணி, வெற்றியை நோக்கி முன்னேறியது. ஆனால், பெல்ஜியம் அணிக்கு வெற்றியை வழங்க விரும்பாத இந்திய வீரர்கள் திறம்பட விளையாடினர். 8வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்ஸாண்டர் ஹென்ரிக்ஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். பின்னர் 47வது நிமிடத்திலும் இந்திய அணியின் கையே ஓங்கியது சிம்ரன் ஜித் சிங் கோல் அடித்து 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது.

ஆனால், ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சைமன் குக்னர்ட் இறுதி கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் தலா 2-2 கோல்கள் என்ற கணக்கில் ஆட்டம் டிராவானது.

 

You'r reading உலககோப்பை ஹாக்கி: இந்தியா – பெல்ஜியம் ஆட்டம் டிரா! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை