அம்மாவின் நிஜ வாரிசு நீங்கள்தான்... உங்கள் தலைமை ஏற்கிறோம் விவேக்கை உசுப்பேற்றிய கோஷ்டிகள்!!

தினகரனுக்கு எதிராக இன்னும் கலக மனநிலையில் இருக்கிறார்கள் இளவரசியின் வாரிசுகள். ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் என கஜானா சாவியை அவர்கள் கொத்தாக வைத்திருப்பதால், கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் தினகரன்.

அதை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என சசிகலாவிடம் முட்டி மோதிப் பார்த்தார். ' கணக்கு வழக்குகளில் விவேக் தெளிவாக இருக்கிறார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டாராம் சசிகலா.

ஏறக்குறைய பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகித்து வருகிறார் விவேக். சமீபத்தில் அவரது குடும்ப நிகழ்வில் பங்கேற்ற அவரது கோஷ்டியைச் சேர்ந்தவர்கள், ' அம்மாவே தூக்கி வளர்த்த பிள்ளை நீங்கள். இன்றும் போயஸ் கார்டன்தான் உங்களுக்கான முகவரி.

அம்மாவின் நிஜ வாரிசாக அதிமுகவினர் உங்களைப் பார்க்கிறார்கள். நீங்கள் களமிறங்கினால் உங்கள் தலைமையை ஏற்க லட்சக்கணக்கான தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள்' எனத் தூபம் போட்டுள்ளனர். இதற்குப் பதிலாக கையெடுத்துக் கும்பிட்ட விவேக், எனக்கு எந்த அரசியலும் வேண்டாம். அமைதியாக இருந்தால் போதும். அவர்(தினகரன்) அரசியலைப் பார்த்துக் கொள்வார். இனி இப்படியெல்லாம் பேச வேண்டாம்' என ஸ்டிரிக்ட்டாகக் கூறிவிட்டாராம்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News