விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல்.. திமுக பொறுப்பு குழுக்கள் நியமனம்

Dmk announced by election commitees fo vikkiravandi, Nanguneri

by எஸ். எம். கணபதி, Sep 25, 2019, 14:36 PM IST

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களுக்கு திமுக சார்பில் தேர்தல் பணியாற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய பொறுப்புக் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளது.

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளராக புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். நாங்குனேரி தொகுதி, காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களுக்கு திமுக சார்பில் தேர்தல் பணியாற்ற பொறுப்புக் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

தொகுதியில் பொறுப்புக் குழு தலைவராக முன்னாள் அமைச்சர் பொன்முடி, செயலாளராக ஜெகத்ரட்சகன், மஸ்தான், அங்கயற்கண்ணி, செல்வகணபதி, ஏகேஎஸ் விஜயன், கிருஷ்ணசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியப் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் நேரு, காணை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக எ.வ.வேலு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காணை தெற்கு ஒன்றியப் பொறுப்பாளராக தாமோ அன்பரசன், மேற்கு மற்றும் பேரூர் பொறுப்பாளராக ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தயாநிதி மாறன், கவுதம் சிகாமணி, கலாநிதி உள்பட 10 எம்.பிக்களும், ஜெ,அன்பழகன் உள்பட 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாங்குனேரி தொகுதி தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, செயலாளராக கனிமொழி, ஒன்றியப் பொறுப்பாளர்களாக ஆவுடையப்பன், அப்துல்வகாப், சிவபத்மநாபன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, பெரிய கருப்பன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சுரேஷ் ராஜன், மனோதங்கராஜ், முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பாளர்களாக கருப்பசாமி பாண்டியன், அப்பாவு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிக்குழுவில்,பழனிமாணிக்கம், ஞான திரவியம் உள்பட 7 எம்.பி.க்களும், 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

You'r reading விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல்.. திமுக பொறுப்பு குழுக்கள் நியமனம் Originally posted on The Subeditor Tamil

More Tirunelveli News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை