எனக்கு எண்டே கிடையாது... முன்பை விட அதிகளவில் டவுன்லோடு செய்யப்படும் டிக்டாக்!

TikTok downloads from APKMirror increased by 12 times since India ban

by Mari S, Apr 19, 2019, 18:53 PM IST

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர் தான் அதிகளவில் டவுன்லோடு செய்யப்படுவதாக ஏபிகே மிரர் வெப்சைட் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி டிக்டாக் செயலியை இந்திய அரசு கடந்த ஏப்ரல் 17ம் தேதி தடை செய்தது.

இந்நிலையில், முன்பை விட ஏபிகே மிரர் எனும் வலை தளத்தில் 12 மடங்கு அதிகமாக டிக்டாக் செயலியை இந்தியர்கள் டவுன்லோடு செய்து வருவதாக ஏபிகே மிரர் தெரிவித்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்ய முடியாத செயலிகளை APKMirror வெப்சைட்டில் சென்று பதிவிறக்கம் செய்து கொண்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும்.

ஏற்கனவே இந்தியாவில் பத்து கோடிக்கும் மேலாக டிக்டாக் செயலி டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை தொடர்ந்து, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்ட பின்னரும், இளைஞர்கள் டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்ற விஷயம் தெரியவந்துள்ளது.

இதனை தடுக்க இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது பில்லியன் டாலர் கேள்வி தான். இதற்கு முன்பு இந்தியாவில் பார்ன் வெப்சைட்டுகள் தடை செய்யப்பட்டன. ஆனாலும், விபிஎன் பயன்படுத்தி, பலரும் தங்களது மொபைல் மற்றும் கணினிகளில் ஆபாச வீடியோக்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

டிக்டாக்: இந்திய மொழிகளில் பாதுகாப்பு குறிப்புகள்

You'r reading எனக்கு எண்டே கிடையாது... முன்பை விட அதிகளவில் டவுன்லோடு செய்யப்படும் டிக்டாக்! Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை