இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் சமீபத்தில் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. பின்புறம் குவாட் காமிரா, ஆற்றல் அதிகமான மின்கலம் (பேட்டரி), ஹோல்-பஞ்ச் திரை போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட இன்ஃபினிக்ஸ் ஹாட் 10, பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்ற விலையில் அடங்குவதால் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 சிறப்பம்சங்கள்
சிம் : இரண்டு நானோ சிம்
தொடுதிரை: 6.78 அங்குலம்; எச்டி+ 720X1640 பிக்ஸல் தரம்; ஐபிஎஸ் திரை; இடப்பக்க மேல்மூலையில் ஹோல்-பஞ்ச்
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 16 எம்பி மற்றும் இரண்டு 2 எம்பி ஆற்றல் கொண்டவை உள்ளிட்ட குவாட் காமிரா (செயற்கை நுண்ணறிவு -ஏஐ லென்ஸ்)
இயக்கவேகம் : 4 ஜிபி மற்றும் 6 ஜிபி
சேமிப்பளவு : 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் கூட்டும் வசதி)
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10; எக்ஸ்ஓஎஸ் 7.0
பிராசஸர் : மீடியாடெக் ஜி70
மின்கலம் : 5,200 mAh
வைஃபை, 4ஜி, ஜிபிஎஸ், புளூடூத், 3.5 மிமீ ஹெட்போன் இணைப்பு கொண்டது.
அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனையாக இருக்கும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், பாகிஸ்தானில் விற்பனையாகும் விலை விவரங்கள்படி 4ஜிபி + 64ஜிபி போனுக்கு ரூ.9,300/- 4 ஜிபி + 128 ஜிபி போனுக்கு ரூ.10,600/- 6 ஜிபி + 128 ஜிபி போனுக்கு ரூ.11,500/- தோராயமாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனை விலை இனிமேல் அறிவிக்கப்படவேண்டும்.