ஆறு மாத காலம் பயணம், 300 மில்லியன் மைல்கள் தொலைவு, இன்சைட் என்ன செய்யப் போகிறது?

NASA Insight Probe landed Mars

by Devi Priya, Nov 27, 2018, 18:43 PM IST

நாசாவின் "தி இன்சைட் ப்ரோப்" விண்கலம் 300 மில்லியன் மைல்கள் கடந்து, 6 மாத காலம் பயணம் செய்து செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இன்சைட் ரோபோ தரையிறங்கிய சில நிமிடங்களில் செவ்வாய் நிலப்பரப்பின் புகைப்படத்தை எடுத்து மிக விரைவாக தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியுள்ளது. அந்த புகைப்படம், ரோபோவின் சுற்றுப்புறத்தில் இருந்த அழுக்கான தரை போன்றதாக இருந்தது.

இந்த இன்சைட் ரோபோ 360 கிலோ கிராம் எடை கொண்டது. அடுத்த 2 ஆண்டுகள் வரை இன்சைட் ரோபோவை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தை பற்றி அமெரிக்கா ஆய்வு நடத்தப் போகிறது. இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் லேன்டரை பயன்படுத்தி சூரியக் குடும்பத்தின் கோள்களில் பாறைகள் உருவானது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்யும். சூரியக் குடும்பத்தின் கோள்களில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் உடனடியாக அது குறித்து இன்சைட் அறிய முயலும். செவ்வாய் கிரகம் எதனால் ஆனது. செவ்வாயில் எத்தகைய பொருள்கள் நிறைந்துள்ளன என்பதையும் கண்டுபிடிக்க முயலும்.

இன்சைட் ரோபோ செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமா என்பது பற்றிய ஆராய்ச்சிக்காக அனுப்பப்படவில்லை.நாசாவின் அடுத்த திட்டம் அந்த ஆய்வை மேற்கொள்ளும்.

தரையிறங்குவதற்கு ஏன் செவ்வாய் கிரகத்தை தேர்வு செய்தனர்?

பூமியும் செவ்வாயும் 3-4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி தன்மையுடன் இருந்தவை. வெப்பம், நீர் , வளிமண்டலத்தால் ஆனவை. அதன்பின் செவ்வாய் கிரகம் மாற்றமடையவில்லை. ஆனால் பூமி தொடர்ந்து மாற்றமடைந்து கொண்டே வந்து தற்போது உயிர்கள் வாழும் அளவுக்கு மாறியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பல ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் வெற்றியடைந்தது 40 சதவிகிதம் மட்டுமே. ஏனென்றால், விண்கலங்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவது தரையிறக்குவது என்பது கடினமான செயல் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

You'r reading ஆறு மாத காலம் பயணம், 300 மில்லியன் மைல்கள் தொலைவு, இன்சைட் என்ன செய்யப் போகிறது? Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை