Apr 29, 2020, 10:28 AM IST
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதன்முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. Read More
Apr 28, 2020, 13:05 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 28, 2020, 13:00 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 3 லட்சத்து 45,357 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3.4 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 27, 2020, 21:56 PM IST
சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இன்று 47 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் மட்டும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 570 ஆனது.தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.26) 64 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Apr 27, 2020, 21:53 PM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(டி.ஏ.) உயர்வை, அடுத்தாண்டு ஜூன் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈட்டிய விடுப்பு சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Apr 27, 2020, 14:19 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 523 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.26) 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 6 சிறுவர்களும் அடங்குவர். Read More
Apr 27, 2020, 14:16 PM IST
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு டாக்டர்களை தள்ளியது ஏன் எனத் தமிழக அரசு, நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 26, 2020, 13:45 PM IST
சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இது மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1755ல் இருந்து 1821 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் பலியானதால், கொரோனா சாவு எண்ணிக்கை 23 ஆனது. Read More
Apr 26, 2020, 13:42 PM IST
ஊரடங்கால், மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் திருவிழா ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. Read More
Apr 26, 2020, 11:11 AM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி, வாகனங்களில் சுற்றியவர்களிடம் ரூ.3 கோடியே 27 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கை மீறி மக்கள் வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. Read More