Sep 8, 2020, 09:12 AM IST
சென்னை மற்றும் கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று பரவல் இது வரை கட்டுப்படவில்லை. கோவையில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
Sep 7, 2020, 09:14 AM IST
தமிழகத்தில் இது வரை 4.63 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 4 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 7836 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலம் முழுவதும் நேற்று(செப்.7) 5783 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 5, 2020, 09:17 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. வழக்கம் போல் நேற்றும் புதிதாக 5976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 51,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. Read More
Sep 4, 2020, 09:06 AM IST
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 4.45 லட்சமாக உள்ளது. உயிரிழப்பு 7608 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. Read More
Sep 3, 2020, 09:05 AM IST
செங்கல்பட்டு, கோவை, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் தினமும் 300, 400 பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ், ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. Read More
Sep 2, 2020, 09:10 AM IST
தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 33,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 3 லட்சத்து 74,172 பேர் குணம் அடைந்துள்ளனர். 7418 பேர் உயிரிழந்துள்ளனர். 52 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனாவுக்கு இது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. Read More
Sep 1, 2020, 09:09 AM IST
சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது, கோவை, சேலம், கடலூர் மாவட்டங்களிலும் 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது. Read More
Aug 31, 2020, 09:16 AM IST
கோவை, சேலம் மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு தினமும் 300ஐ தாண்டுகிறது. தற்போது சென்னை உள்பட 15 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு இன்று(ஆக.31) முடிகிறது. Read More
Aug 27, 2020, 13:50 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 60,432 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. Read More
Aug 26, 2020, 09:08 AM IST
கோவை, சேலம், கடலூர் மாவட்டங்களில் நேற்று 300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், இது வரை கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. Read More