கையில் டீ கிளாஸை ஏந்தி மிஸ் இந்தியா திரைப்படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் கீர்த்தி சுரேஷ்..

by Logeswari, Nov 4, 2020, 19:45 PM IST

தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் தான் இவரின் நடிப்பு திறமை பலருக்கும் தெரியவந்தது. இதையடுத்து பெண்குயின் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியானது. இவர் விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து வெற்றி படங்களை தந்துள்ளார். நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் மிஸ் இந்தியா. இந்த திரைப்படமும் ஒடிடி தளத்தில் தான் வெளியாக உள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் கீர்த்தி சுரேஷ் ஒரு டீ கடை ஆரம்பித்து கடின உழைப்பால் எப்படி பணக்காரராக மாறுகிறார் என்பது தான் கதைக்களமாக அமைந்துள்ளது. இதனை மக்களுக்கு கொண்டு சேரும் வகையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் மிஸ் இந்தியா திரைப்படத்தை மையப்படுத்தி டீ கிளாஸை கையில் ஏந்தியும் மற்றும் டீ வார்த்தைகளை கொண்ட ஆடை அணிந்தபடி திரைப்படத்திற்காக ப்ரோமோஷன் செய்துள்ளார். இதற்குரிய புகைப்படங்களை சோசியல் மீடியா அனைத்திலும் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துக்களை அளித்து வருகின்றனர். பெண்குயின் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வில்லை.

இந்நிலையில் மிஸ் இந்தியா திரைப்படம் எப்படி இருக்கும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உடன் சாணி காயிதம் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

You'r reading கையில் டீ கிளாஸை ஏந்தி மிஸ் இந்தியா திரைப்படத்திற்கு ப்ரோமோஷன் செய்யும் கீர்த்தி சுரேஷ்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை