தயாரிப்பாளரிடம் வினோதமான கோரிக்கை வைத்த நடிகை..

by Chandru, Feb 23, 2021, 18:18 PM IST

தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற டாப்ஸி தனது திறமையால் பாலிவுட்டில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். நடிகை தயாரிப்பாளரான சுனிர் கெதர்பால் என்பவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் டாப்ஸி. அனுராக் காஷ்யப் இயக்கும் டோபாரா படத்தில் இணைந்திருக்கிறார் டாப்ஸி. இப்படத்தில் தயாரிப்பாளர் சுனிர் கெதர் பால் இணைந்துள்ளார்.டாப்ஸி நடித்த இந்தி படம் பட்லா. இப்படம் ஹீரோவுக்காக ஸ்கிரிப்ட் எழுதப்பட்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் சுதிரை சந்தித்த டாப்ஸி ஸ்கிர்ப்ட்டை ஹீரோவுக்கு பதிலாக ஹீரோயின் ஸ்கிரிப்ட் டாக மாற்றுங்கள் என்றார். அவரும் அதை ஏற்றுக் கொண்டு ஹீரோயின் ஸ்கிரிப்ட்டாக மாற்றினார்.

அதற்காக தற்போது டாப்ஸி நன்றி தெரிவித்துள்ளார்.பட்லாவின்போது தயாரிப்பாளர் சுனிர் கெதர்பால் நான் வைத்த "வினோதமான வேண்டுகோளை" ஏற்று ஹீரோயின் ஸ்கிரிப்ட்டாக மாற்றினார். அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றார்.டாப்ஸி நடிக்க அனுராக் காஷ்யப் இயக்கும் டோபாரா ஒரு அறிவியல் புனைகதை. பிப்ரவரி 22 திங்கள் அன்று, டாபாராவின் படப்பிடிப்பு தொடங்கியதாக டாப்ஸி அறிவித்தார். அவர் அனுராக் உடன் ஒரு வேடிக்கையான படத்தைப் பகிர்ந்து கொண்டார்.

பாலிவுட்டில் பெரும்பாலான ஹீரோயின்கள் பாய்ஃபிரண்டு இல்லாமல் இருப்பதில்லை . டாப்ஸியும் இதற்கு விதிவிலக்கில்லை. . அவரது பாய் ஃபிரண்ட் மத்தியாஸ் போ. இவர் டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு தொழில்முறை பேட்மிண் டன் வீரர். பாய்ஃபிரண்ட் பற்றி அதிகம் பகிர்ந்துகொள்ளாமலிருந்த டாப்ஸி சமீபகாலமாக அவரை பற்றிப் பகிர்வதுடன் அவருடன் மாலத்தீவில் டான்ஸ் ஆடிய படங்களையும் சமீபத்தில் பகிர்ந்தார்.மத்தியாஸ் போ 2015 இல் ஐரோப்பிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2012 கோடைக்கால ஒலிம்பிக்கிலும் அவர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். டாப்ஸி மற்றும் மத்தியாஸ் பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகின்றனர்.

You'r reading தயாரிப்பாளரிடம் வினோதமான கோரிக்கை வைத்த நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை