மனைவியுடன் ஆர்யா நடித்த பட ரிலீஸ் திடீர் முடிவு ..

by Chandru, Feb 23, 2021, 21:22 PM IST

நடிகர் ஆர்யாவுக்கு அடுத்டுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கிறது. ஏற்கனவே மனைவி சாயிஷா ஜோடியாக நடித்த டெடி, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் சார்பட்டா பரம்பரை, விஷாலுடன் நடிக்கும் எனிமி ஆகிய படங்களில் நடிக்கிறார். சாரபட்டா பரம்ப்ரை படத்துக்காக ஆர்யா கடுமையான பயிற்சிகள் செய்து பாக்ஸர் தோற்றத்துக்கு மாறி நடித்தார். இதன் படப்பிடிப்பு முடிந்தது. அடுத்து விஷாலுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு எனிமி என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடக்கிறது. சாயிஷாவுடன் நடிக்கும் படம் டெடி நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்திருந்தது. இப்படத்தை சக்தி சவுந்திர ராஜன் இயக்கி உள்ளார்.

டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இது காமெடியுடன் கலந்த திகில் படமாக இது உருவாகி இருக்கிறது. இதில் ஆர்யா சாயிஷாவுடன் சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், மகிழ் திருமேனி நடித்துள்ளனர். டெடி படத்தை வரும் மார்ச் 19-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். 19ம் தேதிக்கு பதிலாக வரும் மார்ச் 12-ந் தேதியே ஓடிடி-யில் வெளியிடு வதாக படக்குழு தெரிவித்துள்ளது. குழந்தைகளை கவரும் விதத்தில் டெடி உருவாகி இருக்கிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வரவேறை பெற்றது.

You'r reading மனைவியுடன் ஆர்யா நடித்த பட ரிலீஸ் திடீர் முடிவு .. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை