போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே உஷார்

acting as police officer victim arrested

by Suganya P, Apr 2, 2019, 10:30 AM IST

சேலம், எடப்பாடி அருகே, வாகன ஓட்டிகளிடம் போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ஒருவரைக் கைது செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் – சங்ககிரி  சாலை  வழியாகச்  செல்லும் வாகன ஓட்டிகளிடம் போலீஸார் ஒருவர் வசூல் வேட்டையில் ஈடுபட்டு  வருவதாகப் புகார் எழுந்தது. இதனால், வாகன ஓட்டிகள் தினம் தினம் அவதிப் படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், கொங்கணாபுரத்தில் சுற்றித் திரிந்த நபர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், போலி அடையாள அட்டையுடன் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தியநபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்  பெரியநாச்சியூரை சேர்ந்த குமார் என்பதும் தெரியவந்து. வழக்குப் பதிவு செய்துள்ள  போலீஸார் குமாரை விசாரித்து வருகின்றனர். 

You'r reading போலீஸ் போல் நடித்து வசூல் வேட்டை – வாகன ஓட்டிகளே உஷார் Originally posted on The Subeditor Tamil

More Local news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை