பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??

how to make healthy green leaves kootu in tamil

by Logeswari, Oct 15, 2020, 19:56 PM IST

கீரை என்றாலே அதில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளதே நினைவிற்கு வரும்.. இதனை பொரியல், கூட்டு என்று வகைவகையாக செய்து உண்ணலாம். வாரத்தில் இரண்டு முறை கீரை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கீரையை பருப்போடு சேர்த்து கூட்டாக சமைத்தால் உண்ண சுவாயாக இருக்கும். சரி வாங்க பாசி பருப்பு கீரை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:-
கீரை - 1 கப்
பாசிப் பருப்பு - 4 ஸ்பூன் சின்ன
வெங்காயம் - 4
தக்காளி - 1
மஞ்சள் தூள் -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/4 கப்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 1

செய்முறை:-
முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் அரிசி மாவு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில் பாசிப்பருப்பை போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கீரையை நீரில் ஒருமுறை அலசி, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கீரையை வேக வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய்,பெருங்காயத்தூள் போன்ற பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் குக்கரில் உள்ள கீரையை பருப்புடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கீரை கூட்டு ரெடி!!!

You'r reading பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை