கணவனின் சந்தேகத்தால் மனம் உடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை..

by Logeswari, Nov 3, 2020, 21:18 PM IST

குரோம்பேட்டை அருகே கணவன் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் இளம்பெண் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள குரோம்பேட்டையை சேர்ந்தார் சரண்ராஜ். இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு செவிலியராக பணிபுரிகின்ற கௌசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. சமீப காலமாக சரண் தனது மனைவியின் நடத்தையில் சதேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பணியை முடித்து வீடு திரும்பிய கௌசல்யாவிடம் சரண் சண்டை இழுத்துள்ளார்.

சண்டை முத்திப்போக கோவமாக கௌசல்யாவை திட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் மனம் உடைந்த கௌசல்யா படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சரண் திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது தனது மனைவி இறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் மூழ்கினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீஸ் புகார் அளித்தனர்.போலீஸ் கௌசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கௌசல்யாவின் கணவரான சரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading கணவனின் சந்தேகத்தால் மனம் உடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை.. Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை