Dec 17, 2020, 11:09 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20ம் தேதி முதல் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். Read More
Dec 15, 2020, 17:20 PM IST
சபரிமலையில் பக்தர்கள், போலீசார் மற்றும் ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் உள்பட அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Dec 15, 2020, 11:31 AM IST
சபரிமலையில் போலீசார் உட்படக் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் மகர விளக்கு காலம் வரை கூடுதல் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.சபரிமலையில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக கடந்த மாதம் 15ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. Read More
Dec 10, 2020, 15:43 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வருமானம் கடுமையாகக் குறைந்துள்ளது. இந்த மண்டலக் காலத்தில் நடை திறந்து 23 நாட்களில் இதுவரை ₹ 3.82 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இதே நாளில் ₹ 66 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 9, 2020, 11:46 AM IST
கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது முன்பதிவு செய்து மட்டுமே தரிசனத்திற்குச் செல்ல முடியும். ஆனால் கடந்த சில தினங்களாகத் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்கின்றனர். Read More
Dec 4, 2020, 10:58 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்குக் குறைவான இளம்பெண்களுக்குத் தரிசனம் கிடையாது என்று கேரள போலீஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குத் தரிசனம் செய்யக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. Read More
Dec 1, 2020, 17:42 PM IST
தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநில பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 பக்தர்களும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தலா 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் Read More
Nov 30, 2020, 11:04 AM IST
சபரிமலையில் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Nov 29, 2020, 14:24 PM IST
சங்பரிவார் தொண்டர்கள் அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாச வீடியோக்களை பரப்பியும் என்னுடைய நிம்மதியை கெடுக்கின்றனர் என்று கடந்த இரு வருடங்களுக்கு முன் சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய பிந்து அம்மிணி கூறியுள்ளார். Read More
Nov 29, 2020, 11:35 AM IST
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் எந்த விலக்கும் அளிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More