கொரோனா தடுப்பூசி: முதல் நாளில் 29 லட்சம் பதிவு

Mar 2, 2021, 08:41 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக்கான தடுப்பூசிக்கு பொதுமக்கள் பதிவு செய்து போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்நாளில் மொத்தம் 29 லட்சம் பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை காலை பிரதமர் மோடி புதுடெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 45 முதல் 60 வயதுடையோரில் ஏற்கனவே வியாதிகள் இருப்போர் இணையதளம் மற்றும் செயலி மூலமாக முன்பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திங்கள் இரவு 8:30 மணிவரைக்கும் 29 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒருவர் நான்கு பேருக்கு பதிவு செய்யலாம். ஒருவர் இரண்டு பேருக்கு பதிவு செய்திருந்தாலும் ஏறத்தாழ 60 லட்சம் பேர் பதிவு செய்திருப்பர். 29 லட்சம் பதிவுகளில் ஒவ்வொன்றும் நான்கு பேருக்காக செய்யப்பட்டிருந்தால் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய செய்திகள்