எப்பொழுதும் அழகாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் காலேஜ் பெண்களுக்கு சொல்லவா வேண்டும். ஒரு பைசா செலவில்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய அழகு குறிப்புகளை காண்போம்.
கை, கால் நகங்களை, “வி’ வடிவத்தில் வெட்டாதீர்கள்; உடைந்து விடும். ரொம்பவும் ஒட்ட, ஒட்ட வெட்டவும் கூடாது. கீழே சதை நோக்கி வளர ஆரம்பித்து விடும்.
நகத்தால் வெறுமனே முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க முயலக் கூடாது. நகத்தைச் சுற்றி டிஷ்யூ பேப்பரை அல்லது மெல்லிய துணியை விரலில் சுற்றிக் கொண்டு தான் நீக்க வேண்டும்.
பழுத்த பருவையும், வெறும் விரல்களால் அழுத்தக் கூடாது. பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பரை விரலில் சுற்றிக் கொள்ள வேண்டும்.
வெறும் காலுடன் சகதியில் அல்லது ஈரத் துணியில் அதிக நேரம் இருக்கக் கூடாது. சேற்றுப்புண் மாதிரி நோய் தொற்று ஏற்படும். பாத வெடிப்பின் வழியாகவும் கிருமிகள் உடம்பினுள் செல்லும்.
வறண்ட தோல் உடையவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு, முகம் கழுவக் கூடாது. பால் அல்லது தயிர் தடவியோ அல்லது பேஷ் வாஷ் உபயோகித்தோ முகம் கழுவலாம்.
முகத்துக்கு மேக்-அப் போடும் போதும், பேஸ்பேக் போடும் போதும் கழுத்தை கவனிக்காமல் விடக் கூடாது. முகமும், கழுத்தும் தனித்தனியான கலர்களில் தெரியும்.
ஒவ்வொரு முறை நகத்துக்கு பாலிஷ் போடும் போதும், இடையே ஒரு நாள், நகம் சுவாசிக்க ஓய்வு தரவேண்டும். இல்லையெனில், நகம் மஞ்சள் கலராகிவிடும்.