நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் தான் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செண்டர்கள் கூறினால் அதற்கு சீல் வைக்கப்பட்டு, அந்த தகவலை வெளியிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். ஆனால், வெளிநாடுகளில் குழந்தையின் பாலினத்தை சர்வ சாதாரணமாக தெரிவித்து விடுவார்கள்.
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன், தனது காதலர் ஜார்ஜ் பெனாய்டோவுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்பே எமி ஜாக்சன் கர்ப்பமாகி உள்ளார். ஆனால், குழந்தை பிறந்த பின்னர் தான் தங்களது திருமணம் நடக்கும் என இருவரும் அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில், தற்போது, தனக்கு ஆண் குழந்தை பிறக்க போவதாக நடிகை எமி ஜாக்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.