பிகில் வெளியீட்டு தேதியில் மீண்டும் குழப்பம்?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் தீபாவளி தினமான ஞாயிறு வெளியாகுமா இல்லை அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை வெளியாகுமா? என்ற குழப்பம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, ஆனந்த்ராஜ், விவேக் மற்றும் யோகிபாபு என நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில்.

வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக் கிழமை வருவதால், அதற்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையான அக்டோபர் 25ம் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், தீபாவளிக்கு தான் பிகில் ரிலீஸ் என்ற அறிவிப்பு மீண்டும் பரவியது. இந்நிலையில், இன்று அர்ச்சனா கல்பாத்தி ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில், பிகில் ரிலீஸ் தேதி குறித்த தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், தணிக்கை சான்றிதழ் கிடைத்த உடன், படம் வெளியாகும் தேதியுடன் போஸ்டர் வரும் என்றும், பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கவனத்தில் கொண்டு தேதி முடிவு செய்யப்படும் என்று அந்த ட்வீட்டில் அர்ச்சனா கல்பாத்தி தற்போது வெளியிட்டுள்ளார்.

இதனால், மீண்டும், படம் தீபாவளி அன்று வெளியாகுமா இல்லை அதற்கு முன்பாகவே வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருப்பதையே இந்த ட்வீட் அறிவுறுத்துகிறது என பலரும் கமெண்ட்டுகள் அடித்து வருகின்றனர்.

அந்த ட்வீட்டுடன் இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக மேலும் ஒரு பிகில் போஸ்டரை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டு ரசிகர்களை வரும் வியாழனன்று நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழா மோடுக்கு மாற்றியுள்ளார்.

Advertisement
More Cinema News
raghava-lawrence-meets-kamal-haasan-after-darbar-audio-function
கமல் போஸ்டரில் சாணி அடித்த நடிகர்.. கமலுடன் திடீர் சந்திப்பு..
aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams
படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..
kamalhaasans-papanasam-to-be-remade-in-chinese
சீன மொழியில்  ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா?
vijay-sethupathis-story-on-farmers
கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..
archana-kalpathis-announcement-on-50th-day-of-bigil
பிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..
kajal-aggarwal-to-marry-a-businessman-soon
காஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..
did-raghava-lawrence-refuse-to-work-with-kamal-haasan
கமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..
actress-indhuja-enjoys-rajini-film-baasha
முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..
thalapathy-64-song-update-anirudh-reply-to-his-fan
தளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..
akshay-kumar-gifts-onion-earrings-to-twinkle-khanna
ரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..
Tag Clouds