பேயாக நடிக்கும் தமன்னாவுக்கு பேய் பயமா?.. அவரே சொன்ன பதில்..

தேவி, தேவி 2 படங்களில் நடிகையின் ஆவி ஒன்று உடலுக்குள் புகுந்ததுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மீண்டும் பெட்ரோமாக்ஸ் என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

பேய் படத்தில் தொடர்ந்து நடிப்பதை நானும் விரும்பவில்லை. ஆனால் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அனந்த பிரம்மோ மற்ற பேய் படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். இது காமெடி பேய் படம்.

கண்ணே கலைமானே, சைரா நரசிம்ம ரெட்டி என சீரியஸ் படங்களில் நடித்ததால் ஒரு காமெடி படத்தில் வித்தியாசத்துக்காக நடித்தேன். பேய் பயம் இருக்கிறதா என்கிறார்கள். சிறுவயதில் பயம் இருந்தது இப்போது பேய் பயம் கிடையாது.

வைதேகி காத்திருந்தால் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி - செந்தில் காமெடியில் பெட்ரோமாக்ஸ் பற்றி வரும் காமெடி பற்றி இப்பட இயக்குனர் ரோகின் விளக்கினார். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. படத்துக்கு பெட்ரோமாக்ஸ் பெயர் வைத்ததற்கு அந்த காமெடியும் ஒரு காரணம். என்னதான் பெட்ரோமாக்ஸ் என பெயர் வைத்திருந்தாலும் இதுவரை நான் பெட்ரோமாக்ஸ் விளக்கை பார்த்ததே இல்லை.
இவ்வாறு தமன்னா கூறினார்.

ஹீரோக்களுக்கு டைட்டிலுக்கு மேல் அவர்களின் பெயர்களை போடுவதைப்போல் இப்படத்துக்கு தமன்னா நடிக்கும் என்று எனது பெயரை போஸ்டரில் போட்டிருக்கிறார்கள். இதுபோல் என் பெயரை நான் பார்ப்பது முதல்முறை என்றாலும் என் ஒருத்தியால் மட்டுமே இந்த படம் உருவாகிவிடவில்லை. இதில் நடித்த மற்றவர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அவர்களில் ஒருத்தியாகத்தான் நான் நடித்திருக்கிறேன். எனவே இது அனைவருடைய படம் தான்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி ஒரு வட்டத்தில் சிக்க மாட்டேன். எல்லா விதமான படங்களிலும் நடிக்க தான் விருப்பம். பிரபலமான ஒருவரின் வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதிலும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன். சமீகாலமாக ஹீரோ, ஹீரோயின் என்ற பாகுபாடு குறைந்து வருகிறது. ஹீரோக்களுக்க நிகராக ஹீரோயின்களும் உழைக்கின்றனர்.

இவ்வாறு தமன்னா கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds