விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உர்வாகியிருக்கும் படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசை. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பு. உலகம் முழுவதும் இப்படம் நாளை வெளியாகிறது.
இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார் இயக்குனர் அட்லி. ரசிகர் ஒருவர் அஜித் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறுங்கள் என்று கேட்க அதற்கு பதில் அளித்துள்ளார்.
அட்லி, நான் அஜித் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அஜித் நடித்த விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் என்னுடைய ஃபேவரிட் படங்கள் என்று தெரிவித்துள்ளார் அட்லி.
விஜய், அஜீத் ரசிகர்கள் ஒவ்வொரு பட ரிலீஸின்போதும் நெட்டில் மோதிக்கொள்கின்றனர். இம்முறை அந்த மோதலை தவிர்ப்பதற்காக அஜீத்தை பாராட்டி அவரது ரசிகர்களுக்கு அட்லி சமாதான புறா பறக்கவிட்டிருக்கிறார் என்று பலரும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.