திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் ஆனார் டி,ராஜேந்தர்.. தேர்தல் முடிவுகள் அறிவிப்பு..

by Chandru, Dec 23, 2019, 10:38 AM IST
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சென்னை மீரான் சாகிப் தெருவில் உள்ளது. இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது.
மொத்தம் 532 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
இயக்குனர், நடிகர், விநியோகஸ்தர் டி.ராஜேந்தர் தலைமையிலும், அருள்பதி தலைமையிலுமாக இரு அணிகள் போட்டியிட்டன. இதுதவிர மற்றொரு அணியினரும் போட்டியிட்டனர். நேற்று நடந்த சங்க தேர்தலில் சரத்குமார், ராதாரவி, ராதிகா, பூர்ணிமா, எஸ்.ஏ.சந்திரசேகரன், தங்கர் பச்சான், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
மாலையில் 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளராக டி.மன்னன், பொருளாளராக பாபுராவ் தேர்வு செய்யப்பட்டனர்.


More Cinema News