யாருடைய தூண்டுதலாலும்  தாக்கிப் பேசவில்லை.. ”தர்பார்” விழா  சர்ச்சை பேச்சுக்கு லாரன்ஸ் மீண்டும் விளக்கம்..

by Chandru, Dec 23, 2019, 10:43 AM IST
Share Tweet Whatsapp

'ரஜினி நடித்த தர்பார்' பட  இசை வெளியீட்டு கடந்த சில வாரங்களுகு முன்பு சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராகாவா லாரன்ஸ் நடிகர் கமல் போஸ்டரில் சிறுவயதில் சாணி அடித்தாக பேசினார். இதற்கு கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து கமல்ஹாசனை  நேரில் சந்தித்து லாரன்ஸ்விளக்கம் அளித்தார் ஆனாலும் சர்ச்சை ஓயவில்லை. யருடைய துண்டுதாலோ தான் அவர் இப்படி பேசியிருக்கிறார் என்று பலரும் சர்சையை ஊதி பெரிதாகுகின்றனர். ரஜினி தூண்டுதலால் இப்படி பேசியதாக சிலர் கூறி வருகின்றனர். இதுகுறித்து லாரன்ஸ் மீண்டும் விளக்கம் அளித்திருக்கிறார்.  
அவர் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனது டிவிட்டுகள், பேசிய பேச்சு, இனிமேல் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் என்னுடைய  சொந்த கருத்துக்கள் மட்டுமே.  தலைவர் சூப்பர் ஸ்டார் எவ்வகையிலும் இதற்கு பொறுப்பல்ல. ரஜினி சார் சொல்லி தான் நான் பேசுவதாக சிலர் சொல்லுவது உண்மை இல்லை. அவர் பேச விரும்பினால், தானாகவே பேசுவார். ஒருவரை தூண்டிவிட்டு பேசவைக்ககூடிய நபர் அல்ல.

என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம். நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதம், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமே. எந்த அரசியல் கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல,  யாரையும் ஆதரிக்கவில்லை. நான் எனது சேவையைச் செய்கிறேன், தேவைப்படும் போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன் அவ்வளவுதான்.

இவ்வாறு லாரன்ஸ் கூறி உள்ளார்.


Leave a reply