டைரக்டர் ஆகிறார் பூ பார்வதி.. அரசியல், த்ரில்லர் ஸ்கிரிப்ட் ரெடி..

by Chandru, Jan 21, 2020, 20:09 PM IST

நடிகைகளில் ஸ்ரீபிரியா, ரேவதி, நந்திதா தாஸ், ரோகிணி திரைபடங்கள் இயக்கி உள்ளனர். அந்த வரிசையில் விரைவில் இயக்குனராக உள்ளார் பூ பார்வதி.

சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன். பெங்களூர் நாட்கள் படங்களில் நடித்திருக்கும் இவர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சிறந்த நடிகை என்று பார்வதிக்கு ரசிகர்கள் புகழாராம் சூட்டினாலும் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த அளவே தேடி வருகின்றன. அதற்கு காரணம் அவர் ஹீரோக்கள் பற்றி வெளிப்படையாக கருத்துக்கள் பகிர்வதுதான் என்று கூறப்படுகிறது. பார்வதியும் பட வாய்ப்புக்காக தேடி செல்லாமல் வந்த வாய்ப்பை மட்டும் ஏற்று நடித்து வருகிறார். இந்நிலையில் பார்வதிக்கு இயக்குனர் ஆசையும் வந்திருக்கிறது.

இதுபற்றி அவர் கூறும்போது,' இந்த ஆண்டு இறுதிக்குள் படம் இயக்குவேன். அரசியல், த்ரில்லர் என 2 கதைகள் ரெடியாக வைத்திருக்கிறேன். முதலில் இயக்கப்போவது அரசியல் படமாஈ த்ரில்லர் படமா என்பதை சீக்கிரமே சொல்கிறேன்' என தெரிவித்திருக்கிறார் பார்வதி.


More Cinema News