மெட்ராஸ் மைசூர் பாகு கேட்ட பாலிவுட் நடிகை.. கணவர் வாங்கிச்சென்றாரா?

by Chandru, Jan 27, 2020, 18:51 PM IST

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கிரிக்கெட் கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வரலாறு இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 83 என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.

அப்போது இந்திய அணிக்கு கபில்தேவ் கேப்டனாக இருந்தார். அந்த வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆக ஜீவா நடிக்கிறார். இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தார் ரன்வீர்சிங். அவரிடம் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து ஒரு கிலோ மைசூர்பாகும், ஹாட் சிப்ஸிலிருந்து இரண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்காமல் திரும்பி வந்துறாதே என அன்பாக ஆர்டர் போட்டிருக்கிறார் மனைவி தீபிகாபடுகோன்.
ரன்வீர் சென்னையிலிருந்து மும்பை திரும்பிய போது தீபீகா கேட்ட மைசூர்பாகும். ஹாட் சிப்ஸ்சும் வாங்கிச் சென்றாரா என்பதற்கு இதுவரை பதில் இல்லை.
83 படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய நடிகர் கமல்ஹாசன் உரிமை வாங்கியிருக்கிறார்.


Leave a reply