நயன்தாரா, தமன்னா, சமந்தா கேரவன் செலவை அவர்களே ஏற்க வேண்டும்.. தயாரிப்பாளர் சரமாரி புகார்..

by Chandru, Feb 19, 2020, 18:25 PM IST

அட்டு படத்தில் நடித்த ரிஷி ரித்விக், ஆஷா நடித்துள்ள படம் மரிஜுவானா. இப்படத்தை எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல், ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே. ராஜன் பேசியதாவது:
தயாரிப்பு செலவு மிக மிக அதிகரித்துவிட்டது. இந்நிலையில் நடிகைகள் படப்பிடிப்பு நேரத்தில் கேரவன் பயன்படுத்துகின்றனர். அதற்கான செலவை நடிகைகளே ஏற்க வேண்டும்.

நயன்தாரா படப்பிடிப்புக்கு வரும்போது அவருக்கு உதவியாக ஒப்பனையாளர், சிகை அலங்காரம் செய்பவர், காஸ்டியூமர் என 6 பேர் வருகிறார்கள். ஒவ்வொரு வருக்கும் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பேட்டா தரவேண்டியுள்ளது அதற்கு மட்டுமே தினமும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை தயாரிப்பாளர்களுக்குச் செலவாகிறது. தமன்னா, சமந்தா போன்றவர்களின் உதவியாளர்களுக்கும் இதுபோல் தயாரிப்பாளர்கள் பேட்டா தர வேண்டும்.

இதுபோன்ற செலவுகளை அந்தந்த நடிகைகளே ஏற்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் இது குறித்து ஆலோசித்துத் தக்க முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு கே .ராஜன் பேசினார்.


Leave a reply