விஜய்க்கு முத்தம் கொடுத்த பிரபல ஹீரோ.. மாஸ்டர் படப்பிடிப்பில் பரபரப்பு..

by Chandru, Feb 19, 2020, 18:31 PM IST

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனராஜ். வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என பெரும் பட்டாளமே நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. படத்தின் ஆர்ட் டைரக்டர் சதீஷீன் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது அருகிலிருந்த விஜய் சேதுபதி அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்தினார். பின்னர் அருகிலிருந்த விஜயையும் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி. இதனால் விஜய் மகிழ்ச்சியில் பூரித்தார். எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் பலமாகக் கைதட்டல் எழுப்பினர்.

இன்னும் 2 வாரங்களில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் எனப் பட குழுவினர் தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்து டீசர், டிரெய்லர், இசை வெளியீட்டு நடக்கவிருக்கிறது. கோடை கொண்டாட்டமாக வரும் ஏப்ரல் 9ம் தேதி படம் வெளியாகிறது.


Leave a reply